இந்து சமய அறநிலைய துறை நிதியில் புதிதாக கல்லூரிகள் துவங்ககூடாது: தி.மு.க. அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

திமுக அரசு, இந்து சமய அறநிலையத்துறையின் வருமானத்தை வைத்து கல்லூரிகள் துவங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. அதாவது கடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

Update: 2021-11-15 10:35 GMT

தமிழகத்தில் உள்ள பல கோயில் நிர்வாகங்கள் கல்லூரி துவங்குவதற்கு அனுமதி கோரி எந்த ஒரு விண்ணப்பங்களும் அளிக்கவில்லை எனவும், கோயில்கள் அமைந்துள்ள இடங்களை தாண்டி பல கிலோ மீட்டர் தொலைவில் கல்லூரிகள் கட்டப்படுவதாக மனுதாரர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கோயில் நிதியில் துவங்கப்பட்டிருக்கும் 4 கல்லூரிகள் தவிர புதிதாக கல்லூரிகள் துவங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனை இந்துக்கள் வரவேற்றுள்ளனர்.

பல இடங்களில் இந்து கோயில்களின் பணத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் கோயில்களுக்கு செலவழிக்காமல் தேவையில்லாத இடங்களுக்க பணத்தை செலவு செய்வது இந்துக்களுக்கு பிடிக்கவில்லை. பல இடங்களில் கோயில்கள் சிதிலமடைந்து வருகிறது. கோயில் நிதிகளை அது போன்ற திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் வேறு வழிகளில் செலவழிப்பதை இந்துக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது திமுக அரசு, இந்து சமய அறநிலையத்துறையின் வருமானத்தை வைத்து கல்லூரிகள் துவங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. அதாவது கடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

மாநிலத்தில் உள்ள 10 கோயில்களின் நிதியில் இருந்து 150 கோடி ரூபாய் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை செயல்படுத்தும் விதமாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பாக கொளத்தூரிலும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் சார்பில் பரமத்திவேலூரிலும், திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயில் சார்பில் தொப்பம்பட்டியிலும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் விளாத்திக்குளத்திலும் என்று 4 இடங்களில் புதிதாக கல்லூரிகள் துவங்குவதற்கு தமிழக உயர்கல்வித்துறை கடந்த அக்டோபர் 6ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: News 18 Tamilnadu


Tags:    

Similar News