ஆவின் பால் பாக்கெட் எடையில் ஏற்பட்ட குளறுபடி.. பால் முகவர்கள் கண்டனம்..
ஆவின் விற்பனை நிலையங்களில் பச்சை நிற பால் பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு பெருமளவில் இருந்து தான் வருகிறது. குறிப்பாக அட்டைதாரர்களுக்கு பச்சை நிற பால் பாக்கெட்டுகளை முறையாக விநியோகிக்க முடியாமல் விற்பனையாளர்கள் மிகவும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். பச்சை நிற பால் பாக்கெட் கிடைக்காததால் செறி ஊட்டப்பட்ட பசும்பால் என்று விற்பனை செய்யப்படும் ஊதா நிறப் பால் பாக்கெட்டுகளை மக்கள் அதிகம் வாங்கி செல்கிறார்கள்.
இந்த ஒரு நிலையில் சென்னையில் உள்ள பால் முகவர்களுக்கு நேற்று விநியோகிக்கப்பட்ட ஊதா நிற பால்பாக்கெட் களில் எடை குறைவாக இருந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த பால் முகவர் ஒருவர் மின் தராசில் அந்த பால் பாக்கெட்டின் எடையே பரிசோதனை செய்தார். அப்பொழுது அதில் 520 கிராம் இருக்க வேண்டிய பால் பாக்கெட், வெறும் 415 கிராம் மட்டும்தான் இருந்தது. சுமார் 105 ஐந்து கிராம் எடை குறைவாக இருந்தது.
இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி தன்னுடைய கண்டனத்தையும் பதிவு செய்து இருக்கிறார். ஆவின் டிலைட் பால் பாக்கெட் களில் பல பாக்கெட்டுகள் சுமார் 100 கிராம் அளவில் எடை குறைவாகவே விற்பனைக்கு வருகிறது. கடந்த சில மாதங்களாக சென்னை, கோவை, வேலூர் ஆகிய பல மாவட்டங்களில் இந்த எடை குறைவு நடந்து தான் வருகிறது. எனவே மீண்டும் ஆவின் நிறுவனம் எடை குறையாது என்ற உறுதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Input & Image courtesy: News