டெங்கு கண்டுபிடிக்க புதிய கருவி.. கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழகம்..

Update: 2023-10-26 04:47 GMT

டெங்கு வைரஸ் கிருமி உடனே கண்டறியும் கையடக்க கருவியை உருவாக்கும் முயற்சியில் தற்பொழுது தமிழக நுண் திறன் மற்றும் மேம்பாட்டு முறை திறன்மிகு மையம் ஈடுபட இருக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள அரசு தலைமை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனைகளில் டெங்கு வைரஸ் உடனடியாக கண்டறியும் படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறது.


அங்கிருந்து பரிசோதனை முடிவுகள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. அதன் பிறகு தான் டெங்குக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் காலதாமதம் ஏற்படுவதன் காரணமாக இந்த ஒரு முயற்சியை கையில் எடுத்து இருக்கிறது. குறிப்பாக சிட்கோ எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் ஷீமஸ் நிறுவனத்துடன் இணைந்து சென்னை தரமணி டைட்டில் பார்கில் 250 கோடி ரூபாய் செலவில் டென்சன் என்ற மையத்தை அமைத்து இருக்கிறது.


இந்த மையம் சென்னை ஐஐடியுடன் இணைந்து வைரஸை உடனே கண்டறியும் கையெடுக்க கருவியை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட இருக்கிறது. இந்த சோதனை வெற்றி பெற்று கருவி பயன்பாட்டுக்கு வரும் பொழுது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News