அத்தியாவசிய தேவைக்கு முன்னுரிமை தராமல் வரிப்பணத்தில் இலவசங்களா? நீதிமன்றம் அதிருப்தி..
அனைத்து அரசுகளும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முன்னுரிமை கொடுக்காமல் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்க பணத்தை பயன் படுத்துகின்றனர் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்தை பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சில இடங்களில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த எதிர்கால தேர்வுக்கான நிலம் அடையாளம் காணப்பட்ட 10 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட நோக்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்தாதது மற்றும் நிதியை ஒதுக்காததினால் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டப்படி தங்கள் நிலத்தை விடுவிக்க கோரி சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
இந்த ஒரு வழக்கு தான் தற்போது நீதிபதி புகழேந்தி முன்னிலையில் அமர்வுற்கு வந்தது. அப்பொழுது இது பற்றி நீதிபதி கூறுகையில், குறிப்பிட்ட பகுதி மக்களின் எதிர்காலத் தேர்வுகளை கருதி வளர்ச்சி திட்டங்கள் உருவாக்கப்படுகிறது. வசிப்பிடம், வாழ்வாதாரம், சுகாதாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டியது அரசுக்கு கடமை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கையும் துவங்காமல் வளர்ச்சித் திட்டங்களுக்கான அறிவிப்பு மூலம் நிலத்தை அதன் உரிமையாளர்கள் பயன்படுத்த விடாமல் அரசு தடுக்கிறது. அறிவிப்பால் உள்ளாட்சி அமைப்புகள் நில உரிமையாளர்களுக்கு கட்டட அனுமதியும் வழங்க முடியாது.
உரிமையாளர்கள் நிலத்தை அவசர தெரிவிக்க விற்க முடியாது. வளர்ச்சி திட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலத்தை யாரும் வாங்க முன்வர மாட்டார்கள். அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் நிலத்தை விற்பனை செய்தால் நில உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அறிவிக்கப்பட்ட நிலம் மக்களுக்கோ அல்லது சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு பயனின்றி இருக்கிறது. எனவே அரசு அதிவசிய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருக்கிறது.
Input & Image courtesy: News