சாலை விரிவாக்க பணிக்காக கோயிலை அகற்றுவதா.. இந்து முன்னணி புகார்..

Update: 2023-10-31 01:10 GMT

சாலை விரிவாக்க பணிகளுக்காக பல்வேறு கோயில்கள் அகற்றப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆரம்ப காலத்தில் ஒரு பகுதியில் இருக்கின்ற மிகவும் பழமையான கோயில்கள் அந்த நகரின் ஆரம்ப எல்லையில் தான் ஒரு கோவிலை வைத்திருக்கிறார்கள். அப்படி எல்லையில் வைத்திருக்கும் கோவில்களை சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக அகற்றுவது நியாயமா? என்று சமூக வலைதளங்களில் பெரும்பாலான கருத்துக்கள் உலா வருகிறது.


அந்த வகையில் தற்பொழுது ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்தில் வெள்ளோடு தண்ணீர் பந்தல் பகுதியில் விநாயகர் கோயில் மெயின்ரோட்டில் இருந்ததால் சாலை விரிவாக்கம் பணியால் அக்கோயிலைபட்டா இடத்திற்கு மாற்றினார்.  இன்று காலை தி.க அமைப்பு சார்ந்த இந்துமதி என்ற பெண் விநாயகர் திருமேனியும் முருகன் திருமேனியும் சேதப்படுத்தி உள்ளார். அதை கண்டித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஊர் பொதுமக்கள் சார்பாக புகார் கொடுக்கப்பட்டது.


உடனடியாக துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்மணி நடவடிக்கை எடுத்து அவர் மீது சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இந்து முன்னணி தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் கருத்தை பதிவிட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News