பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் இனி கிடையாதா? மக்களே உஷார்!

தமிழகத்தில் இனி பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் கிடைப்பது சிரமம்..;

Update: 2023-04-04 02:00 GMT

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது ஆவின் நிறுவனத்திற்கும், பால் உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை முடிவு அடையாமல் நீடித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஆவின் நிறுவனத்திற்கு பால் உற்பத்தியாளர்கள் தங்களுடைய பால் விநியோகத்தை நிறுத்தியதாகவும் அதன் காரணமாக ஆவின் நிறுவனம் தற்போது பால் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாட்டை சந்திப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


ஆவின் நிறுவனம் சார்பில் சென்னை முழுவதும் சுமார் 14.5 லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் நிறுவனம் கொழுப்பு சத்துக்களின் அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு பச்சை மற்றும் நீல நிறங்களில் பாலை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக மற்ற பால் பாக்கெட்களை காட்டிலும் பச்சை நிற பால் பாக்கெட் 500 மில்லி மீட்டர் ரூபாய் 22 க்கு விற்பனை ஆகி வருகிறது. இதனை பொறுத்தவரை தொடர்ச்சியான பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை செய்வதால் நிறுவனத்திற்கு நட்டம் ஏற்படுவதாக சட்டசபையில் கூறப்பட்டது.


பால் வரத்து குறைந்தது காரணமாக ஆவின் பால் நிறுவனம் தனது 90% பச்சை நிற பால் விற்பனையை நிறுத்தி இருக்கிறது. தற்போது சட்டசபை நிறைவடைந்த பிறகு முழுமையாக பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தப் போவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 100 பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது பத்து பாக்கெட்டுகளில் மட்டுமே விற்பனை ஆவதாக ஆவின் நிறுவனம் கூறியிருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News