'எவனும் போகக்கூடாது' - குடிபோதையில் நடுரோட்டில் காரை நிறுத்தி அட்டகாசம் செய்த தி.மு.க மாவட்ட கவுன்சிலர்

குடிபோதையில் தி.மு.க கவுன்சிலர் காரை நடுரோட்டில் நிறுத்தி அட்டகாசம் செய்தது பரபரப்பாகி வருகிறது.

Update: 2022-11-28 02:09 GMT

குடிபோதையில் தி.மு.க கவுன்சிலர் காரை நடுரோட்டில் நிறுத்தி அட்டகாசம் செய்தது பரபரப்பாகி வருகிறது.

விழுப்புரத்தில் காருக்கு வழிவிடும் தகராறு காரணமாக 2 மணி நேரம் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி வைத்திருந்த தி.மு.க மாவட்ட கவுன்சிலர் உடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தி.மு.க'வைச் சேர்ந்த ராஜீவ் காந்தி விழுப்புரம் மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக உள்ளார்.

நேற்று இரவு விழுப்புரத்தில் இருந்து தனது ஊரான கூடலூருக்கு காரில் சென்று வருகின்ற பொழுது ஆயந்தூர் பகுதியில் எதிரே வந்த காருக்கு வழி விடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தன்னை கடந்து சென்ற கார் மறுபடியும் வந்தால் தான் காரை எடுப்பேன் என்ன கூறி நடுவழியில் காரை நிறுத்தி தகராறு செய்தார்.

அவருடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர், பின்னர் தொடர்ந்து போலீஸ் டி.எஸ்.பி பார்த்திபன் பேச்சுவார்த்தை நடத்தி கவுன்சிலரை அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் மக்கள் கடும் இடைஞ்சலுக்கு ஆளாகினர்.


Source - Polimer News 

Similar News