திருப்பூர் அருகே பல கோடி மதிப்புள்ள கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: வீட்டு மனைகளாக விற்க முயற்சி!
திருப்பூர் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமித்து வீட்டு மனைகள் உருவாக்கவும் முயற்சி நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உடனடியாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமித்து வீட்டு மனைகள் உருவாக்கவும் முயற்சி நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உடனடியாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் சாலை நாச்சிபாளையத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஏக்கர் கணக்கில் உள்ளது. இந்த நிலத்தின் சர்வே எண்: 105ல் 2.47 ஏக்கர் உள்ளது. இந்த இடமானது இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் தனியாருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவர் பத்திரம் தயார் செய்து விற்றுள்ளார். இதனிடையே மேலும் அந்த நிலத்தை வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு அவைகளும் தற்போது விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த நிலத்தின் மதிப்பு 10 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. கோயிலுக்கு சொந்தமான நிலங்களை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு பக்தர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
எனவே கோயில் நிலத்தை வீட்டு மனைகளாக பிரிக்கக்கூடாது. தனியாருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும். கோயில் பயன்பாட்டை தவிர மற்றவைகளுக்கு அந்த நிலத்தை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் பற்றி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த நிலமானது கடந்த 1912ல் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 1968ல் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் தனியாருக்கு பட்டா அளிக்கப்பட்டது. இதனை தவறாக பயன்படுத்துவதை அறிந்த பின்னர் தற்போது கோயில் நிலத்தை பதிவு செய்யக்கூடாது என்று பதிவுத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறினர்.
திருப்பூர் மாவட்டத்தில் இந்த கோயில் மட்டுமல்ல பல கோயில்களில் உள்ள நிலங்களை தவறுதலாக பயன்படுத்தி அதன் வருவாயை கோயிலுக்கு பயன்படுத்தாமல் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Dinamalar
Image Courtesy:Tamilnadu Tourism