ஐடி ரெய்டில் தி.மு.க. குண்டர்களால் தாக்கப்பட்ட பெண் அதிகாரி காயத்ரி! தங்கப்பதக்கங்களை குவித்த வீராங்கனைக்கே தமிழகத்தில் இந்த நிலையா?

கரூரில் வருமான வரித்துறை சோதனையின்போது தி.மு.க. குண்டர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் அதிகாரி காயத்ரி முன்னாள் தடகள வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2023-05-27 14:55 GMT

கரூரில் வருமான வரித்துறை சோதனையின்போது தி.மு.க. குண்டர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் அதிகாரி காயத்ரி முன்னாள் தடகள வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருடன் சென்ற சக அதிகாரிகளும் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் அதிகாரி காயத்ரி தடகளத்தில் மிகப்பெரிய சாதனைகளைப் புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த காயத்ரி மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணியைக் கொண்டிருந்த போதும் பள்ளி பருவத்திலேயே தடகளப்போட்டியில் ஜொலித்து வந்துள்ளார். படிப்பிலும் படு கெட்டிக்காரரான இவர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91 சதவீத மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் 16 வயதுடையவருக்கான தடை தாண்டுதலில் தங்கம், 2016ல் அசாமில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், புனேவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை பெற்று சரித்திரம் படைத்துள்ளார்.

இது போன்று விளையாட்டுப் போட்டியில் பல தங்கப்பதக்கங்களை பெற்ற வீராங்கனை ஒருவர் வருமான வரித்துறையில் அதிகாரியாக பணியை செய்து வருகிறார். அதே போன்று நேற்று (26.05.2023) கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் வீடுகளில் சோதனையிட சென்றபோது தி.மு.க.வினர் சூழ்ந்து கொண்டு அதிகாரி காயத்ரியை தாக்கினர். இதில் தனது பணியை செய்ய முடியாமல் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்திய நாட்டிற்காக விளையாடி பல பதக்கங்களை பெற்ற ஒரு முன்னாள் வீரருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது.

ஆனால் டெல்லியில் மல்யுத்த வீரர்களுக்கு குரல் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் முன்னாள் தடகள வீராங்கனையும் அதிகாரியுமான காயத்ரியை தி.மு.க.வினர் தாக்கியுள்ளனர். இதற்கு எவ்வித கண்டனமும் தெரிவிக்காமல் தி.மு.க.வினர் மவுனம் சாதிப்பது என்னவென்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News