நீலகிரி: அதிநவீன கேமரா மூலம் புலியை தேடும் பணியில் வனத்துறை!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மனிதர்களையும், கால்நடைகளையும் வேட்டையாடி வரும் புலியை கண்டுப்பிடிக்கும் பணியில் அதிநவீன கேமரா மூலம் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2021-10-07 02:46 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மனிதர்களையும், கால்நடைகளையும் வேட்டையாடி வரும் புலியை கண்டுப்பிடிக்கும் பணியில் அதிநவீன கேமரா மூலம் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

தேவன் எஸ்டேட், மே பீல்டு, மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், 4 மனிதர்களையும் அடித்துக்கொன்ற புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 5 டிரோன் கேமராக்கம், 85 மேற்பட்ட தானியங்கி கேமராக்கள், இரண்டு கும்கி யானைகள், பயிற்சி மோப்ப நாய்கள் புலியை தேடுகின்ற பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அது மட்டுமின்றி 60க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், துப்பாக்கி பயிற்சி பெற்ற வனத்துறையினர் உள்ளிட்ட பலர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புலியை எப்படியாவது உயிருடன் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புலி இன்றாவது கிடைத்துவிடுமா என்ற நோக்கில் மக்கள் காத்திருக்கின்றனர்.

Source,Image Courtesy: News 7 Tamil


Tags:    

Similar News