தமிழகத்தில் ஒரு ஆண்டில் மட்டும் 12 ஆயிரம் பேர் மரணம்: நெடுஞ்சாலை விபத்துக்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

கடந்த ஒரு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் நெடுஞ்சாலை விபத்துகளில் சிக்கி 12 ஆயிரம் பேர் உயிரிழப்பு.

Update: 2023-02-22 00:31 GMT

தமிழக எல்லைக்கு உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பதிவாகும் விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. குறிப்பாக தமிழக அரசின் போக்குவரத்து துறை கடந்த 2022 ஆம் ஆண்டு பதிவாகியுள்ள விபத்துக்கள் தொடர்பான ஒரு அறிக்கையை தற்போது வெளியிட்டு இருக்கிறது. அந்த விவரங்கள் அடிப்படையில் இதன் முடிவு அதிர்ச்சி தரும் வகையில் அமைந்து இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 17,000 கோர விபத்துகள் நடந்திருப்பதாகவும் இதில் 12,032 பேர் மரணமடைந்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.


தேசிய நெடுஞ்சாலை கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் 4,730 பேரும், மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகள் 9502 பேரும், மாநில நெடுஞ்சாலையில் 6187 பேரும் விபத்துகளில் உயிரிழந்த இருக்கிறார்கள்.


கடந்த ஆண்டு தமிழகத்தில் அதிகபட்சமாக கோவைகளில் கோவையில் 4,045 பெயர் மரணம் அடைந்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக விபத்துக்கள் அதிகரிப்பதற்கு குண்டும் குழியுமான மோசமான சாலை வடிவமைப்பு மற்றும் சாலை முறையாக பராமரிப்பது காரணமாக இருக்கிறது. இந்த விபத்துக்களை தடுப்பதற்கு அரசு முறையாக நடவடிக்கை எடுக்குமா? என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகளும் வழித்து வருகிறது.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News