ஸ்டெர்லைட் ஆலையை திற... 500 பேர் திரண்டு கலெக்டரிடம் மனு... நடந்தது என்ன?

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கோரிக்கையுடன் 500 பேர் திரண்டு கலெக்டரிடம் மனு அளித்து இருக்கிறார்கள்.

Update: 2023-04-25 01:15 GMT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முற்பட்டார்கள். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் முற்றுகையிட்டதால் அங்கு தற்போது பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதில் தற்பொழுது அரசியல் பின்னணி இருப்பதாகவும் பல்வேறு காரணங்களாக கூறப்பட்டு இருக்கிறது.


இந்த ஒரு நிலையில் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பை சேர்ந்த சுமார் 500 நபர்கள், அதில் 300 பேர் ஆண்கள் மற்றும் 200 பெண்கள் உள்ளிட்ட 500 நபர்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தந்த கலெக்டருடன் இது குறித்து மனு ஒன்று அளித்து இருக்கிறார்கள். நேரில் கலெக்டர் யிடம் -மனு கொடுப்பதற்காக வழக்கறிஞர் மணிகண்ட ராஜா தலைமையில் நேற்று ஊர்வலமாக வந்தனர்.


அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஊரக டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான போலீசார் ஊர்வலத்திற்கு அனுமதியில்லை என்று கூறி அவர்களை தடுத்து நிறுத்தினர். இந்த ஒரு சூழ்நிலையில்தான் ஆதரவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் அந்த ஒரு பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி - பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 24 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Input & Image courtesy: Asianet

Tags:    

Similar News