பக்தர்கள் சென்ற மாட்டு வண்டியை உடைத்த போலீசார். பழனியில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு !
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ளது நெய்க்காரம்பட்டி என்ற கிராமம். அந்த கிராமத்தில் வசிக்கின்ற மக்கள் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மாட்டு வண்டிகளில் நேற்று காலை ஐவர்மலை கோயிலுக்கு சென்றனர்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பழனி அருகே உள்ள கோயிலில் தரிசனம் செய்த பக்தர்களின் மாட்டு வண்டிகளை சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ளது நெய்க்காரம்பட்டி என்ற கிராமம். அந்த கிராமத்தில் வசிக்கின்ற மக்கள் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மாட்டு வண்டிகளில் நேற்று காலை ஐவர்மலை கோயிலுக்கு சென்றனர்.
அப்போது மாட்டு வண்டிகளை மலை அடிவாரத்தில் நிறுத்திவிட்டு ஐவர் மலை கோயலில் தரிசனம் செய்ய சென்றனர். அப்போது அந்த பகுதயில் ரோந்து பணியில் ஈடுபட்ட பழனி தாலுகா காவல் நிலையத்தை சேர்ந்த சுந்தரம் உள்ளிட்ட போலீசார், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாட்டு வண்டிகளை அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு மாட்டு வண்டிகளுக்கு காவலுக்கு இருந்த சிலர் தடுத்தும் கேட்காமல் சேதப்படுத்தி சென்றுள்ளனர். சாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் அடிவாரத்திற்கு வந்த பொதுமக்கள் அனைவரும். இன்று நெய்க்காரம்பட்டியில் உள்ள பழனி தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
உடனடியாக மாட்டு வண்டிகளை சேதப்படுத்திய போலீஸ் சுந்தரம் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோஷமிட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு இருந்த உயர் அதிகாரிகள் சம்பந்தபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதில் சுமுக தீர்வு எட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சங்கிலி மற்றும் வண்டிகளின் இருக்கைகளை அனைத்தும் உரிய பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source: Amma express
Image Courtesy: Amma express
https://ammaexpress.in/4-August-news--8