நவபாஷாண முருகன் சிலைக்கு நடத்தப்படும் கும்பாபிஷேக சர்ச்சை - அர்ச்சகரின் அதிர்ச்சி வீடியோ!

நவபாஷாண முருகன் சிலையை பலப்படுத்தாது நடத்தப்படும் கும்பாபிஷேகம்.

Update: 2022-12-23 02:33 GMT

பழனி முருகன் கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து பழமையான கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்று ஏற்கனவே அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன் பெயரில் பல்வேறு கோவில்களுக்கு கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பழனி முருகன் கோவிலுக்கு வருகின்ற, ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


இதன் காரணமாக கோவில்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும் கோவிலில் நவபாஷாண சிலையான முருகன் சிலையை பலப்படுத்தாமல் கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது. அப்படி நடத்தினால் அர்ச்சகர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அர்ச்சகர் ஒருவர் பேசிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து அர்ச்சகர் சங்க தலைவர் பேசிய ஆடியோ பதிவு தான் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், நவபாஷாண சிலையை பலப்படுத்தாது கும்பாபிஷேகம் நடத்தினால் பலன் இருக்காது என்று அர்ச்சகர் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இந்து சமய அறநிலைத்துறை இதற்கு செவி சாய்த்ததாக தெரியவில்லை.


நவபாஷாண முருகன் சிலையை பலப்படுத்தும் நோக்கில் தமிழக அரசின் சார்பில் ஓய்வு பெற்ற நீதி அரசர் பொக்கிலியின் தலைமையில் குழு ஒன்று அமைத்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நவபாஷாண சிலையை பலப்படுத்தாது கும்பாபிஷேகம் நடக்க மேலிடம் ஏதேனும் அறிக்கையில் கையெழுத்துச் சொன்னால் கையெழுத்திடக்கூடாது என்று அர்ச்சகர் சங்கத் தலைவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அர்ச்சகர் சங்க தலைவராக குருபேஸ்வர குருக்கள் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Thanthi TV

Tags:    

Similar News