அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இதனால் தினமும் முருகப்பெருமான் வெள்ளிக்காமதேனு, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் திருக்கல்யாணம் இன்று (மார்ச் 17) மலை நடைபெற உள்ளது. இதனையொட்டி காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி மாலை 5 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்க உள்ளது. அப்போது முத்துக்குமார சுவாமி, வள்ளி தெய்வானைக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதனை காண்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர்.
Source, Image Courtesy: Maalaimalar