கோயில் இடத்துக்கு பட்டா: VAO குடும்பத்தார் மீது வழக்கு!

Update: 2022-02-17 09:24 GMT

நாகை மாவட்டத்தில், போலி ஆவணங்கள் மூலமாக கோயில் இடத்தை பட்டா போட்டுக்கொண்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவர்களின் குடும்பத்தார் மீது நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாகை அருகே உள்ள அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நா.சண்முகம். நாகை புத்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கைங்கர்ய சபா தலைவராக உள்ளார். இவர் நிலஅபகரிப்பு தடுப்பு போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில் நாகை மாவட்டம், புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வம் என்பவர், சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 214 சதது மீட்டர் அளவுள்ள இடத்தினை போலியான ஆவணங்களைதயார் செய்து மலர்க்கொடி என்பவருக்கு பட்டா போட்டுக்கொடுத்துள்ளார். எனவே அந்த இடத்தை உடனடியாக மீட்டு கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் செல்வம் மற்றும் அவரது தாய் மலர்க்கொடி மற்றும் சகோதரர் தினகரன் உள்ளிட்டோர் மீது நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சௌர்ஸ்,Image Courtesy: Dinamani


Tags:    

Similar News