தேனி: ரயில் வரும் சமயத்தில் தண்டவாளத்தில் நடந்து செல்லும் மக்களால் சிரமத்திற்கு உள்ளாகும் ரயில்வே!
மதுரை, தேனி ரயில் வருகின்ற நேரத்தில் தண்டவாளத்தில் மக்கள் நடந்து செல்கிறார்கள் என்று தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தென்னக ரயில்வே மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஸ்டார்ட் ஆஃப் என்ற புதிய தொழில்நுட்ப தொழில் முனைவோரை ஊக்குவித்து அவர்களுடைய தொழில்நுட்பத்தை ரயில்வே துறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஜூன் 21 முதல் இணையத்தில் தொழில் முனைவோர் பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக நிதியுதவி வழங்கப்படும்.
மேலும், ரயில் பாதை விரிசலைக் கண்டறிவது, மின் பாதையை கண்காணிப்பது, உப்பு போன்ற பொருட்களை எடுத்துச் செல்வதற்கு எடை குறைவான சரக்கு பெட்டிகளை உருவாக்குதல், ரயில் பாதை சரளை கற்களை சுத்தப்படுத்தும் இயந்திரம், ரயில்வே மேம்பால பாதைகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது.
மதுரை, தேனி ரயிலை சென்னை வரை நீட்டிக்கும் திட்டம் இல்லை. மதுரை, தேனி இடையில் சரக்கு ரயில் இயக்குவதற்கு மதுரை கோட்டம் தயாராக உள்ளது. மேலும், மதுரையில் இருந்து தேனி இடையே ரயிலை இயக்குவது சவாலாக இருக்கிறது. ரயில் வருகின்ற நேரத்தில் தண்டவாளத்தில் மக்கள் நடந்து செல்கிறார்கள். மொபைலில் செல்ஃபி எடுப்பது, ரயிலுக்கு மிக அருகாமையில் நடந்து செல்வது போன்றவற்றில் பொதுமக்கள் ஈடுபடுகின்றனர். ரயில் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கும்போது மக்கள் குறுக்கே வருவது ரயில் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும். இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: News 7 Tamil