கன மழை எதிரொலி: பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-12 12:47 GMT

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பில்லூர் அணை அணைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பில்லூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது. மொத்த நீர்மட்ட உயரம் 100 அடி ஆகும்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று காலை அணைக்கு 2,200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 86 அடியிலிருந்து 91 அடியாக உயர்ந்தது.

இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இன்று காலை வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் 91 அடியில் இருந்து 97 அடியாக உயர்ந்தது.

மேலும், அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து 4 மதகுகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source,Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News