பிரதமர் பற்றிய புத்தகங்களின் தமிழ் பதிப்பு வெளியீடு: வெளியிடுகிறார் தமிழக ஆளுநர்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி வெளியிடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களைப் பற்றிய 'மோடி@20 நனவாகும் கனவுகள்', 'அம்பேத்கர் & மோடி - சீர்திருத்த சிந்தனைகள் செம்மையான செயல்பாடுகள்' ஆகிய இரு புத்தகங்கள் இன்று அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் வெளியிடப்படுகின்றன. இந்த இருபுத்தகங்களின் ஆங்கிலப் பதிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளன. இந்த இரு புத்தகங்களின் தமிழ்ப்பதிப்பை தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி வெளியிடுகிறார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர். எல். முருகன் முன்னிலையில் இந்த புத்தகங்கள் வெளியிடப் படவுள்ளன. அல்லயன்ஸ் பதிப்பகத்தின் வெளியீடான 'மோடி@20 நனவாகும் கனவுகள்' புத்தகம் கடந்த 20 ஆண்டுகளாக நிர்வாக தலைமைப் பொறுப்பில் குஜராத்தின் முதலமைச்சராகவும், நாட்டின் பிரதமராகவும் பொறுப்பு வகிக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் அவரது தலைமைப்பண்பு குறித்தும் இந்திய சமூகத்தில் புகழும், பொறுப்பும் வாய்ந்த பல்வேறு முக்கிய நபர்கள் எழுதியுள்ள 21 கட்டுரைகள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்த சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு பதவியேற்ற பிறகு, பின்பற்றப்படும் மக்களை மையப்படுத்தும் அணுகுமுறையின் வெற்றி, ஜனநாயக செயல்பாடுகளில் மாற்றம், வளமான இந்தியாவை நோக்கிய தொய்வில்லாப் பயணம், சாமானிய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் நுட்பமான அணுகுமுறைகள் என்பது குறித்து இந்த கட்டுரைகள் மிகச்சிறப்பான முறையில் கருத்துக்களை முன்வைக்கின்றன.
Input & Image courtesy: News