சோழர் கட்டிய 2000 ஆண்டு பழமை வாய்ந்த கல்லணை: கட்டமைப்பு பற்றி மாநாட்டில் பேசிய பிரதமர்!
2,000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் கட்டிய கல்லணையை உள்கட்டமைப்பு மாநாட்டில் விளக்கி வியப்பில் ஆழ்ந்த பிரதமர் மோடி.
சோழர்களால் கட்டப்பட்ட கல்லணை தமிழகத்தில் மிகவும் பழமை வாய்ந்த அணை ஆகும். இவை சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. ஆனால் இன்றும் அதனுடைய பழமை மாறாமல் தடுப்பு அணையாக சிறந்து விளங்குகிறது. இந்த செய்தி பற்றி கேள்விப்பட்டால் நீங்கள் அசந்து போவீர்கள் என்று உள்கட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசி இருக்கிறார். குறிப்பாக பிப்ரவரி மாதம் பட்ஜெட்டுக்கு பின்பு உள்கட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரை ஆற்றினார். அப்பொழுது அவர் கூறுகையில், உள்கட்ட அமைப்பிற்கு ஒரு நாடு அதிகமாக செலவு செய்கிறது என்றால் அந்த நாடு வளமாக இருக்கிறது மற்றும் அதனுடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது என்று அர்த்தம்.
உள்கட்ட அமைப்பிற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறதையும் அவர் எடுத்துக் கூறினார். ஏனெனில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டு இருந்தார். உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது ஒரு நாட்டின் உந்து சக்திக்கு மிகவும் ஊன்றுகோலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
குறிப்பாக இந்த ஒரு மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், தமிழகத்தில் இருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் சோழர்களால் கட்டப்பட்ட கல்லணை பற்றி குறிப்பிட்டு இருக்கிறார் குறிப்பாக 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை தற்போது வரை மிகவும் உற்சாகமாக இயங்கி வருகிறது என்றால் நீங்கள் வியந்து போவீர்கள் என்று குறிப்பிட்ட பேசி இருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar