மூடப்பட்ட காப்பகம் முதியவரின் பணத்தை சுருட்ட ஆசைப்பட்ட காப்பக நிர்வாகி: போலீசார் அதிரடி நடவடிக்கை!

மூடப்பட்ட காப்பகத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவரை பணத்திற்காக தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிற ஆசைப்பட்ட காப்பக நிர்வாகி.

Update: 2022-12-23 14:55 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மூடப்பட்ட காப்பகத்தில் இருந்து முதியவர் ஒருவரை அழைத்து சென்று குற்றத்திற்காக அந்த காப்பகத்தின் நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றார்கள். குறிப்பாக நாகர்கோவிலில் அமைந்த அமைந்துள்ள முதியவர் காப்பகம் தற்போது மூடப்பட்டு இருக்கிறது. இந்த காப்பகத்தில் இருந்த முதியவர்களை அவருடைய குடும்பத்தினருக்கு ஒப்படைக்கும் முயற்சியில் காப்பக நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.


இந்த நிலையில் முதியவர் ஒருவரின் குடும்பத்தில் இருந்து சுமார் 20,000 தொகை மாதம் அவருடைய பெயரில் வந்து சேரும். ஆனால் அவருடைய குடும்பத்தினரிடம் அவரை ஒப்படைக்காமல் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்து கொள்ள வேண்டும் என்று நிர்வாகி ஒருவர் முடிவு செய்து இருக்கிறார். இதன் காரணமாக அபுசாலி என்ற அந்த முதியவரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக திட்டமிட்டு, இளம் பெண் ஒருவரை அவருடைய உறவினர் போல் நடிக்க சொல்லி வீட்டிற்கு அவரை அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு சமூக நலத்துறை அதிகாரிகளிடம் அந்த இளம் பெண் நாடகமாடி இருக்கிறார்.


பின்னர் விசாரணையில் முதியவரை அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முன்வரவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. அப்போது முதியவரை அழைத்துச் செல்ல வந்து இளம் பெண் யார்? என்பதை போலீசார் விசாரித்தார்கள். அப்பொழுதுதான் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது. எனவே முதியவரை பணத்திற்கு ஆசைப்பட்டு உறவினர் போல அழைத்து சென்ற இளம் பெண்ணும் காப்பக நிர்வாகியும் இதன் பின்னால் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இதன் சார்பில் காப்பக நிர்வாகியை தேடும் பணியில் தற்பொழுது போலீசார் ஈடுபட்டு வருகிறார்.

Input & Image courtesy: Polimer News

Tags:    

Similar News