ஆம்னி பஸ் உரிமையாளரிடம் லஞ்சம் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் : பணியிடை நீக்கம்!

ஆம்னி பஸ் உரிமையாளரிடம் ரூபாய் 50 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்.

Update: 2022-10-09 03:17 GMT

மதுரையில் ஆம்னி பஸ் உரிமையாளரிடம் ஒரு பாய் 50,000 லட்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் பணி பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். மதுரையில் ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டராக இருப்பவர் முருகேஷன் கடந்த மாதம் சென்னையில் இருந்து மதுரைக்கு ஆம்னி பஸ் ஒன்று வந்ததும் அந்த பஸ் ஒத்தக்கடை பகுதியில் வந்த பொழுது கட்டுப்பாடு இழந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண் ஒருவர் பலத்த காயும் அடைந்தால் தொடர் சிகிச்சையில் இருந்த அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.


இந்த சம்பவம் தொடர்பாக ஆம்னி பஸ் டிரைவர் மீதும் கொத்துக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆம்னி பஸ் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர். இந்நிலையில் பல நாட்களாகியும் அந்த ஆம்னி பஸ்சை விடுவிக்காமல் இருந்ததாக தெரிகின்றது. இதனால் ஆம்னி பஸ் உரிமையாளர் ஒத்தக்கடை போலிஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.


அப்பொழுது பஸ் விடுவிக்க வேண்டும் என்றால் 50 ஆயிரம் லட்சம் தருமாறு கேட்டுக் கொண்டார். ஆம்னி பஸ் உரிமையாளரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்ட ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த ஆடியோ தொடர்பான விசாரணை நடத்த பயிற்சி பள்ளி விசாரணை நடத்தினார் விசாரணையில் இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்பொழுது இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Maalaimalar News

Tags:    

Similar News