பத்ரகாளி வேடத்தில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர்.!

நாகையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் பத்ரகாளி வேடத்தில் கொரோனாவை கொல்வது போன்று நூதன முறையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.;

Update: 2021-06-10 04:50 GMT

நாகையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் பத்ரகாளி வேடத்தில் கொரோனாவை கொல்வது போன்று நூதன முறையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் கோரத்தாண்டவத்தால் பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். முதல் அலையை விட இரண்டாவது அலை தமிழகத்தை வேகமாக தாக்கியது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழுஊரடங்கை அறிவித்தது. இதனால் சற்று குறைய தொடங்கியது.




 


இருந்தபோதிலும் மக்கள் நடமாட்டம் அதிகளவு சாலைகளில் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு வகையிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த நகையில், நாகையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்ரகாளி வேடத்தில் கொரோனாவை கொல்வது போன்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அவருடன் சிலர் கொரோனா வைரஸ் போல வேடம் அணிந்து, கடைவீதிகளில் வலம் வந்தனர். முககவசம் அணியவில்லை என்றால் உங்களைப் பிடித்துக் கொள்வோம் என்பது போல அவர்கள் பாவனை செய்தனர். சிறிது நேரத்தில் கொரோனா வைரஸ் அழிக்க காளி வேடத்தில் வந்தார் போலீஸ் இன்ஸ்பெக்டர். முகக்கவசம் அணிவதும் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பதோடு அவ்வப்போது கைகளைக் கழுவுவதும்தான் கொரோனா என்ற கொடிய அரக்கனைக் கொல்ல முடியும் என்று அவர் பேசினார்.

Tags:    

Similar News