காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரவுடி படப்பை குணா என்கிற குணசேகரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ரவுடியிசம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்டவைகளில் ஈடுபடுவது. மேலும், ரியல் எஸ்டேட் மற்றும் நிறுவனங்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
அவர் மீது கொலை, கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் என்று 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளது. தற்போது அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று அவருக்கு எதிராக குரல்கள் அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில், போலீஸ் தேடுவதை அறிந்த குணா சில வாரங்களாக தலைமறைவாக இருந்து வருகிறார். அவரது மனைவி எல்லம்மாளை கடந்த 9ம் தேதி கூடுதல் எஸ்.பி.வெள்ளத்துறை தலைமையிலனா போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு இடையில் குணாவின் மனைவி எல்லம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் தனது கணவரை போலீசார் எக்காரணத்தைக் கொண்டும் என்கவுண்டர் செய்யக்கூடாது என குறிப்பிட்டுள்ளார். அதற்கு காவல்துறையினர் குணா மீது என்கவுண்டர் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்று உறுதியளித்துள்ளனர். மேலும் குணாவுக்கு உதவியதாக 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source,Image Courtesy: News 18 Tamilnadu