ஆந்திரா மாநிலத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான 150 கஞ்சாவை தமிழக போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட கும்பலையும் கைது செய்துள்ளது.
தமிழகத்தில் சில மாதங்களாக வெளிமாநிலங்களில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்களை பிடிக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடியான உத்தரவை பிறப்பித்தார். இதனால் ஐ.ஜி., மற்றும் டி.ஐ.ஜி., எஸ்.பி., தலைமையிலான தனிப்படைகள் தீவிரமாக கண்கணாப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக தஞ்சாவூருக்கு காரில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து தனிப்படை போலீஸ் திருத்துறைப்பூண்டி ரவுண்டானா பகுதியில் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. அதன்படி நேற்று காலை திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ரவுண்டானா அருகே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 150 கிலோ கஞ்சா இருந்தது. உடனடியாக அதனை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட கும்பலையும் கைது செய்தது. அதன் மதிப்பு சுமார் ஒரு கோடி இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: News 18 Tamil