மேகதாதுவில் ஒரு செங்கலைக் கூட வைக்க விடமாட்டோம் ! ஓசூரில் பிரேமலதா அதிரடி!
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்காக டிராக்டரில் ஊர்வலமாக பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் சென்று, கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
கேமதாதுவில் அணை கட்டுவதற்கு ஒரு செங்கலைக் கூட வைக்க விடமாட்டோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்காக டிராக்டரில் ஊர்வலமாக பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் சென்று, கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதன் பின்னர் பிரேமலதா பேசும்போது, தமிழகத்தில் ஏற்கனவே வறண்ட பூமியாக உள்ளது. மேலும், மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனம் ஆகும். தமிழகத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறோம்.
அது மட்டுமின்றி பெரும்படையை கூட்டிக்கொண்டு பெங்களூருவுக்குள் நுழைய முடியும், நமக்குள் பிரிவினை ஏற்பட வேண்டாம் என தமிழக விவசாயிகள் சார்பில் சொல்லிக்கொள்கிறேன். தமிழக மக்கள் காந்தியாக இருக்க வேண்டுமா அல்லது சுபாஷ் சந்திரபோஸாக மாற வேண்டும் என கர்நாடக முடிவு செய்ய வேண்டும் என கோபமாக பேசினார்.
Source: News 7
Image Courtesy: Vijayakanth Face book
https://news7tamil.live/not-even-a-brick-took-in-mekadadu-premalatha.html