மதுரைக்கு வருகை தரும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு: போலீசார் உச்ச கட்ட பாதுகாப்பு!

மதுரை வர இருக்கும் இந்திய ஜனாதிபதி அவர்களுக்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

Update: 2023-02-18 02:06 GMT

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு மதுரை நகரில் முக்கிய பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் மதுரைக்கு வருவதை ஒட்டி குறிப்பாக 10 இடங்களில் வாகன நிறுத்த தடை செய்யப்பட்டு இருக்கிறது. மதுரை விமான நிலையத்திலும் அங்கிருந்து அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதைகளிலும் கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தற்பொழுது பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.


சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு பணிக்கு ஈடுபட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் சுற்றுப் பயணத்திற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக காலை 8 45 மணி அளவில் ஜனாதிபதி அவர்கள் புறப்படுகிறார். மதுரை விமான நிலையத்திற்கு பகல் 11:30 மணி அளவில் வந்து சேர்கிறார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. அங்கிருந்து காரில் புறப்பட்டு 12: 15 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் சென்று அடைகிறார். பூரண கும்ப மரியாதையுடன் அவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். மேலும் முன்னேற்பாடுக்கான நிகழ்ச்சிகள் இன்று நடைபெற இருக்கிறது.


பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் அனைவரும் இந்த ஒத்திகையில் ஈடுபட இருக்கிறார்கள். மதுரை நகரில் உச்சகட்ட பாதுகாப்பில் இருந்து வருகிறது. மேலும் கோவில் பணியாளர்களுக்கும் விமான நிலையப் பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. கோவிலை பொறுத்தவரை ஆர்சகர், மரியாதை அளிப்பவர், மேளதாளம் வாசிப்பவர், ஓதுபவர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Indian Express

Tags:    

Similar News