கிருஷ்ணகிரி: விற்பனை இல்லாததால் சாலையில் கொட்டப்படும் மாம்பழங்கள்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிய விலை இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையோரம் மாம்பழங்களை விவசாயிகள் கொட்டிவிட்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-04 07:06 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிய விலை இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையோரம் மாம்பழங்களை விவசாயிகள் கொட்டிவிட்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் 40 ஹெக்டேருக்கு மேல் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மா விளைச்சல் அதிகமாக இருந்தும் விற்பனை செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பருவநிலை மாற்றத்தால் பல்வேறு சிரமங்களை அடைந்து வருகின்றனர். இந்த ஆண்டும் மாமரங்களில் அதிகளவில் பூக்கள் கருகியும், அதனை கட்டுப்படுத்த மருந்து அளித்து காப்பாற்றி வந்தனர்.




 


ஆனால் தற்போது கொரோனா முழு ஊரடங்கு காரணமாக மாம்பழம் விளைச்சல் இருந்தும் அதனை நல்ல விலைக்கு விற்க முடியாமல் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வரத்தும் இல்லை, இதனால் மாம்பழங்களை ஏலம் விடுவதிலும், உரிய விலை கிடைக்காமலும் விவசாயிகள் பெரும் பாதிப்பினை சந்தித்து வருகின்றனர்.

விற்பனை இல்லாத காரணத்தினால் தேசிய நெடுஞ்சாலைகளில் மாம்பழங்களை கொட்டிவிட்டு விவசாயிகள் செல்கின்றனர். இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த மாம்பழங்களுக்கு உரிய விலையும் கிடைக்கல, இதற்கு அரசு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News