கோயில் அகற்றுவதை விட்டுவிட்டு வழிபாடு நடத்த அனுமதிங்க: ஆதிதிராவிட மக்கள் மனு!

Update: 2022-04-05 14:01 GMT

உடுமலை அருகே ஆக்கிரமிப்பு என்றுகூறி கோயில் அகற்றப்படுவதை தவிர்த்து வழிபாடு நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (ஏப்ரல் 4) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அம்மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமை வகித்தார். அப்போது ஒவ்வொரு பொதுமக்களும் குறைகளை மனுக்களாக வழங்கி வந்தனர்.

இதற்கிடையில் உடுமலை பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதில் 100க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களின் குலதெய்வமான கருப்பராயசாமி கோயில் செங்குள கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 150 ஆண்டுகளாக அமைந்துள்ளது. எவ்வளவு மழை பெய்தாலும் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பு இல்லாமல் நீர் தேங்காத இடமாக இருக்கிறது.

இதனிடையே உடுமலை பிஏபி சார்பில் கொடுக்கப்பட்ட அறிக்கையில், குளக்கரையோரத்தில் உள்ள குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அங்கு எந்தவிதமான குடியிருப்புகள் இல்லை. கோயில் மட்டும்தான் இருக்கிறது. இதனிடையே ஏப்ரல் 10ம் தேதிக்குள் கோயிலை அகற்ற உடுமலை ஆர்.டி.ஓ. மற்றும் பொறியாளர் காலம் நிர்ணயம் செய்துள்ளனர். எனவே கோயிலை அகற்றாமல் அதே இடத்தில் வழிபடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News