இராமநாதபுரம்: கொட்டும் மழையிலும் குடை பிடித்து சமைத்து ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கும் பெண்கள்.!
இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் உணவு சமைத்து ஆதரவற்றோர்களுக்க உணவு வழங்கி வருகின்றனர் பெண்கள்.;
இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் உணவு சமைத்து ஆதரவற்றோர்களுக்க உணவு வழங்கி வருகின்றனர் பெண்கள்.
தமிழகத்தில் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதே போன்று சாலைகளில் ஆதரவற்ற நிலையில் வசித்து வரும் ஏராளமானோர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இது போன்ற சமயங்களில் தன்னார்வலர்கள் மட்டும் பொதுமக்கள் தங்களால் முடிந்த உணவுகளை சமைத்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கிராம பெண்கள் ஒன்றிணைந்து கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் குடை பிடித்துக்கொண்டு சமையல் செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
கமுதி அருகே உள்ள பிள்ளையார்குளம் கிராம பெண்கள் ஒன்றிணைந்து அப்பகுதி மக்களிடம் வசூல் செய்து தங்களால் முடிந்த உணவுகளை சமைத்து, ஆதரவற்றோர்களுக்கு வழங்கி வருகின்றனர். இது போன்றவர்களால் இன்னும் மனித நேயம் காக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்க்கது.