ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் இருக்கக்கூடாது என தமிழக அரசு மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளதா?

துணை ஆணையரின் எச்சரிக்கை மீறி ரேஷன் கடைகளில் மோடி படம்.

Update: 2022-11-23 01:56 GMT

ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை தாம்பரம் துணை ஆட்சியரின் எச்சரிக்கையை மீறி வைத்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அரசியல் கட்சிகளுக்கு இடையே இது ஒரு பரபரப்பாக பார்க்கப்பட்டது. செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.


தாம்பரம் மண்டல தலைவர் கணேஷ் தலைமையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு தலைவர் ராஜாத்தி உட்பட 50 மேற்பட்டோர் நேற்றும் தாம்பரம் காவல் நிலையத்திற்கு சென்று அனுமதி கேட்டனர். அப்பொழுது மோடியின் படத்தை ரேஷன் கடைகளில் வைக்க அனுமதி இல்லை என்று தாம்பரம் காவல் துணை ஆணையர் சி.பி.சக்கரவர்த்தி எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது எச்சரிக்கையை மீறியும் தமிழ் காவல் நிலையத்தில் இருந்து நேரடியாக சென்றார்கள்.


தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 33 வது வார்டுக்கு சென்றபடி கோஷ்டம் எழுப்பிய படி ஊர்வலமாக பா.ஜ.கவினர் கடம்பேறி எம்.இ.எஸ் சாலையில் உள்ள 11 மற்றும் 12ம் ரேஷன் கடைகளில் முகப்பில் பிரதமர் மோடியின் படத்தை வைத்தார்கள். ரேஷன் கடைகளில் மோடியின் படத்தை வைக்க ஊர்வலமாக பாஜகவினர் வந்ததால் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Dinakaran

Tags:    

Similar News