ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ய இனி செல்போன் செயலி - தமிழகத்தில் அறிமுகம்!
ரேஷன் கடை பொருட்களின் இருப்பை அறிந்து கொள்ளவும் மற்றும் ஆய்வு செய்யவும் செல்போன் செயலி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் செல்போன் செயலிகள் மூலம் கடைகளின் இருப்புகள் உள்ள பொருட்களை அறிந்து கொள்ளவும், மேலும் ரேஷன் கடைகளை ஆய்வு செய்யவும் பயன்படுத்தும் வகையில் இது அறிமுகமாகிறது. சென்னை தலைமை செயலகலத்தின் பத்திரிகையாளர்களுக்கு உணவுத்துறை அமைச்சர் சங்கரபாணி அளித்த பேட்டியின் போது, ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு தரமான செய்தி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது இந்த ஆய்வு கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரம் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. கடைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் ஆய்வுக்கு செல்ல முயலும் பொழுது விற்பனை முனைய இயந்திரத்தை நிறுத்தி ஆய்வு செய்வதால், பொருட்கள் வாங்க பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்படும். அதனை தவிர்க்க ஒவ்வொரு அலுவலரும் அவர் வைத்துள்ள செல்போன் மூலமாக ஆய்வு செய்வதற்கு செயலில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த செயலில் கடை முழுமையாக ஆய்வு செய்யவும் இருப்பில் உள்ள பொருட்களை மேலோட்டமாக ஆய்வு செய்யும் வசதிகள் உள்ளன.
இதை தற்பொழுது அறிமுகம் செய்து இருக்கிறோம். இந்த செயலி மூலம் ஆய்வு செய்யும்பொழுது அங்குள்ள குறைபாடுகளை உடனே அறிய முடியும். பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதையும் ஆய்வு அலுவலகர் கண்காணிக்க இயலும். மாதம் உள்ள பொருட்களின் இருப்புகளை அறிந்து கொள்ளவும், மாவட்ட கலெக்டர் பத்து கடைகள், கூடுதல் பதிவாளர் 200 கடைகள் என ஆய்வாளர்கள் ஒவ்வொருவரும் எத்தனை கடைகளை ஆய்வு செய்ய வேண்டும்? என்று இலக்கும் நிர்ணயத்தில் இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar News