குடியிருப்பை சுற்றி தேங்கிய மழைநீர்: அரசை கண்டித்து சாலையில் இறங்கிய மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வீடுகள் உள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

Update: 2021-11-13 04:58 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வீடுகள் உள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள தெருக்கள் மழைநீரால் சூழ்ந்துள்ளது. இதில் பல இடங்களில் குடிநீருடன் சேர்ந்து கழிவுநீரும் வருகிறது. இதனால் சாதாரண பொதுமக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், வாணியம்பாடி பகுதியில் தாழ்வாக உள்ள இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அதன்படி கச்சேரி சாலை அருகே வசிக்கின்ற மக்கள் தங்களின் வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீருடன் கழிவுநீரும் தேங்கியிருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். 


இதனை அப்புறப்படுத்தாததை கண்டித்து அப்பகுதி மக்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் காவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக மழைநீரை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன் பின்னர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News