சேலம்: தாத்தா, பாட்டியை உயிரோடு எரித்துக்கொன்றது எதற்கு? போலீசாரிடம் சிறுவன் அளித்த வாக்குமூலம் !
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது கொத்தாம்பாடி பாரதியார் நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் காட்டு ராஜா 75, இவரது மனைவி காசியம்மாள் 65, கடந்த 12ம் தேதி இரவு இவர்களின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் இரண்டு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது கொத்தாம்பாடி பாரதியார் நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் காட்டு ராஜா 75, இவரது மனைவி காசியம்மாள் 65, கடந்த 12ம் தேதி இரவு இவர்களின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் இரண்டு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அவர்களின் பேரனை கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது. இது பற்றி சிறுவன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு சரிவர படிப்பு வராது. இதனால் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருவேன். இதற்கு தனது பெற்றோர்கள் கூட கண்டிக்க மாட்டார்கள்.
ஆனால் தாத்தா, பாட்டியும் திட்டுவார்கள். இதனால் எனக்கு கோவம் வரும். மேலும் நண்பர்களுடன் கடந்த 12ம் தேதி இரவு மது அருந்திவிட்டு கொத்தாம்பாடி ஆற்றோரத்தில் பீடி பிடித்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த எனது பாட்டி என்னை துடைப்பத்தாலும், குச்சியாலும் அடித்தார்.
அது மட்டுமின்றி மிகவும் கடுமையான வார்த்தைகளால் என்னை திட்டினார். அதுவும் எனது நண்பர்கள் முன்னிலையில் இவ்வாறு பேசியது எனக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இரண்டு பேரும் கொல்ல வேண்டும் என்று எனது மனதில் தோன்றியது. இதற்காக எனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்துக்கொண்டு, தாத்தா, பாட்டி வீட்டுக்கு சென்றேன். அப்போது வெளிப்புறமாக கததை தாளிட்டு, வீட்டின் கூரைக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தேன்.
இதில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த தனது, தாத்தா, பாட்டி தீயில் கருகி உயிரிழந்து விட்டனர். போலீசார் எப்படியோ விசாரணை நடத்தியதில் உண்மையை கண்டறிந்து தன்னை கைது செய்துவிட்டதாக வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாத்தா, பாட்டி கண்டித்தால் அவர்களையே கொன்ற பேரனை நினைத்து அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Source, Image Courtesy: Maalaimalar