சேலம், சென்னை விமான சேவை இன்று முதல் தொடக்கம்.!
ஒரு வாரத்திற்கு பின்னர் சேலம், சென்னை இடையே மீண்டும் விமான சேவை போக்குவரத்து துவங்கப்படுகிறது.
ஒரு வாரத்திற்கு பின்னர் சேலம், சென்னை இடையே மீண்டும் விமான சேவை போக்குவரத்து துவங்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமான சேவை கடந்த 25ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து சேலம் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.
இந்நிலையில், அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக விமான சேவையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து ஒரு வாரத்திற்கு பின்னர் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என்று சேலம் விமான நிலைய இயக்குநர் ரவீந்தர் சர்மா கூறியுள்ளார்.