சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதியின்றி நோயாளிகள் அவதி.!
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், அரசு மருத்துவமனையில் படுக்கைகளின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரே படுக்கையில் 3 நோயாளிகள் சிகிச்சை பெறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், அரசு மருத்துவமனையில் படுக்கைகளின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரே படுக்கையில் 3 நோயாளிகள் சிகிச்சை பெறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்தை கடந்து தொற்று எண்ணிக்கை பதிவாகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை குவிந்து வருகிறது. பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இன்றி பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடக சேலம் உருக்காலை வாளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டது. அதிலும் நிரம்பிவிட்டது.
இதனால் சேலம் அரசு மருத்துவமனையிலும் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் ஒரே படுக்கையில் 3 நோயாளிகள் சிகிச்சை பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அது மட்டுமின்றி படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவல நிலையும் தொடர்ந்து வருகிறது. இதனால் நோயாளிகள் கண்ணீர் மல்க தமிழக அரசு மீது குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இந்த நிலைமை தொடர்ந்து வருகிறது.