தருமபுரி அருகே 3,000 மரக்கன்றுகள் நடவு ! கிராமத்தை பசுமையாக்கிய மாணவர்கள் ! கதிர் சிறப்பு பேட்டி !
தருமபுரி அருகே தங்களின் கிராமத்தில் மரக்கன்றுகளை நடவு செய்து, பராமரிப்பு இருந்த கிணற்றை தூர்வாரி அதன் நீர் மூலமாக மரங்களை பராமரித்து வருகின்றனர்.
தருமபுரி அருகே தங்களின் கிராமத்தில் மரக்கன்றுகளை நடவு செய்து, பராமரிப்பு இருந்த கிணற்றை தூர்வாரி அதன் நீர் மூலமாக மரங்களை பராமரித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகாவிற்குட்பட்ட பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் அதிமுக தகவல் தொழில்நுட்பத்துறையின் தருமபுரி மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இதனிடையே பீனிக்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி பள்ளி மாணவ, மாணவிகள் உதவியுடன் 2500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்துள்ளார்.
இது குறித்து கதிர் செய்திகளுக்காக நேரடியாக சென்று கோவிந்தசாமியிடம் சிறப்பு பேட்டி காணப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது: மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழும்,மரங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் எங்கள் கிராமத்தில் பீனிக்ஸ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். அதில் அரசுப்பள்ளி, மாணவ, மாணவிகள் உள்ளனர். அவர்கள் உதவியுடன் இதுவரை 2500'க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்து பாதுகாத்து வருகிறோம். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்,ஆலன், அத்தி, அரசன், நாவல், தான்றி, பூவரசன், புங்கன், இயல்வாகை, மயில்கொன்றை, பனை உள்ளிட்ட பல்வேறு வகையிலான மரங்களை நடவு செய்துள்ளோம்.
அது மட்டுமின்றி கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது 20 ஆயிரம் ரூபாய்க்கு தண்ணீர் வாங்கி, மரங்களுக்கு பாய்ச்சினோம். மேலும், ஏரியில் பராமரிப்பின்றி கிடந்த 40 ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்டு குப்பைத் தொட்டியாக பயன்படுத்தப்பட்டு பராமரிப்பின்றி இருந்த பொதுகிணற்றை, பீனிக்ஸ் குழு மூலமாக பல்வேறு இடங்களில் உதவி கேட்டு தூர் வாரினோம். தற்போது அதில் தேவைக்கேற்ப தண்ணீர் கிடைத்துள்ளது.
கிணற்றை சுற்றி பல்வேறு வகையிலான ஓவியங்களை வரைந்துள்ளோம். சிறுவர், சிறுமிகள் ஓவியங்கள் மூலமாக மரங்களின் பயன்பாடுகளை எளிதில் தெரிந்து கொள்ள இது போன்ற ஓவியங்களை வரைந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Source:கதிர் சிறப்பு பேட்டி