செயிண்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியை தாக்கியதால் இரண்டாம் வகுப்பு மாணவன் தலையில் காயம்: போலீசார் விசாரணை!
ஆசிரியர் தலையில் தாக்கியதால் 2 வகுப்பு மாணவனுக்கு காயம் இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை.
திருவள்ளுவர் மாவட்டம் திருவாலங்காடு செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். இந்த வகையில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை, ஆசிரியர் ஒருவர் சரியாக படிக்கவில்லை என்று காரணத்திற்காக தாக்கியுள்ளார். மாணவனின் தலையில் வீக்கம் ஏற்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெங்கட்ராமன், அவர்களின் தம்பதிகளான 7 வயது மகன் தற்போது அந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான்.
இவனை அந்த பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கம்பினால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே மாணவனின் தலையில் வீக்கம் ஏற்பட்டு இருப்பதை கண்டு பெற்றோர் பள்ளிக்கு சென்று கேட்டபோது முறையாக பதில் அளிக்காததால் பள்ளி நிர்வாகம் வேண்டும் நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளார்கள். மேலும் அந்த பள்ளியில் இருந்து TC வாங்கிக் கொண்டு செல்லுமாறும் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் போலீசார் தற்போது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
ஏற்கனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் எதுவும் கொடுக்கக் கூடாது என்றும் கூறியிருக்கிறது. அவர்கள் தற்போது மழலைப் பருவத்தில் இருந்து பள்ளி பருவத்தை அனுபவிக்கும் வயது அன்புடன் மாணவர்களை அணுக வேண்டிய ஆசிரியர்களை இப்படி அவர்களை அடிப்பது கண்டிக்கத்தக்க ஒரு செயலாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது.
Input & Image courtesy:Polimer