சென்னையில் மாடலிங்துறை பெண்களுக்கு பாலியல் தொல்லை: முகமது சையத் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

Update: 2022-04-15 12:37 GMT
சென்னையில் மாடலிங்துறை பெண்களுக்கு பாலியல் தொல்லை: முகமது சையத் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

சென்னையில் மாடலிங் துறையில் உள்ள இளம்பெண்களை ஏமாற்றி அவர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது சையத் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் படி தற்போது நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர்.

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் முகமது சையத். இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்தில் சுற்றி வந்தார். ஆனால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் மாடலிங்துறையில் காலடி எடுத்து வைத்தார். அந்த சமயத்தில் அவருடன் அறிமுகமாகும் மாடலிங்துறையைச் சேர்ந்த இளம்பெண்களிடம் முகமது சையத் நெருக்கமாக பழகி வந்தார். சில சமயத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர்களிடம் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வந்தார். அதனை அப்பெண்களுக்கே தெரியாமல் வீடியோ பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இது போன்று பல பெண்களிடம் முகமது சையத் ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார். இவர் மீது கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் அலுவலகத்தில் பெண்கள் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து முகமது சையத் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் உயர் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து சென்னை வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மேற்கொண்டுள்ளனர். இதனால் முகமது மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்துள்ளது.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News