வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் சிவகங்கை ஆட்சியர் ஆய்வு.!

வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் மையத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி ஆய்வு நடத்தினார்.

Update: 2021-04-17 06:07 GMT

வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் மையத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி ஆய்வு நடத்தினார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதே போன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானா மதுரை ஆகிய சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குஇயந்திரங்கள் காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.




 


அங்கு, மத்திய பாதுகாப்பு படை போலீஸ், ஆயுதப்படை பிரிவு போலீஸ் என 300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று வேட்பாளர்களால் அங்கீரிக்ககப்பட்ட ஏஜென்ட்களும் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட வளாகத்தில் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்தை இன்று பகல் 11 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மது சூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News