நெல்லை: சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை!
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்து வருவதால் பல மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்திருப்பதை காணமுடிகிறது. அதே போன்று ஆறு, குளம், ஏரிகளிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. சென்னை, உள்ளிட்ட 19 மாவட்டங்களிலும் இன்றும் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

இந்த சூழலில் நெல்லையிலும் கனமழை பெய்து வருகிறது. அங்கு மிகவும் பிரபலமாக சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளது. அக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். தற்போது அங்கு கனமழை பெய்து வருவதால் பாபநாசம் அணையில் அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
Source, Image Courtesy: Dinakaran