அதிகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: தொண்டையை பதம் பார்க்கும் அபாயம்!

அதிகமாக பரவும் வைரஸ் காய்ச்சலின் முக்கிய அறிகுறியாக தொண்டையை குறி வைப்பதாக அமைந்து இருக்கிறது.

Update: 2023-02-26 01:33 GMT

மதுரையில் தற்பொழுது கொரோனாவை விட வேகமாக வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக நாள்தோறும் வைரஸ் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வைரஸ் காய்ச்சலின் முக்கிய அறிகுறியாக தொண்டை வலி இருக்கிறதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. குறிப்பாக தொண்டை வலி காரணமாக 15 நாட்களுக்கு மேல் அவதிப்படும் நோயாளிகள் அதிகரித்து வருகிறார்கள்.


சாதாரணமாக சளி காய்ச்சலுடன் வருபவர்கள் இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும். ஆனால் தற்போது உள்ள வைரஸ் காய்ச்சலின் முக்கிய அறிகுறியாக 15 நாட்களுக்கு மேலாக இதனுடைய பாதிப்பு நீடிக்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும் இதில் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து 15 நாட்களுக்கு மேலாக தங்களுடைய தொண்டைப் பகுதிகளில் அசோகர்யமான வழி உணர்வதாகவும் கூறி வருகிறார்கள்.


இது பற்றி மருத்துவர்கள் தரப்பில் கூறுகையில், குறிப்பாக சாதாரண காய்ச்சலுடன் வருகை தருபவர்கள் ஐந்து நாட்களுக்கு மேல் சாதாரண காய்ச்சல் நீடிக்காது என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாதிரியான வைரஸ் காய்ச்சினால் பாதிக்கப்படுபவர்கள் மூன்று வாரங்களுக்கு மேல் இதனுடைய பாதிப்பை எதிர்கொண்டு வருவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறைந்து எளிதில் இந்த வைரஸ் காய்ச்சல் உடல் முழுவதும் தாக்குவதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. எனவே இவற்றை தடுக்க வெளியில் செல்லும் பொழுது முக கவசம் அணிந்து கொள்ள வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News