சேலம்: அனுமதியின்றி வணிக வளாகத்தில் இயேசு சிலை: பா.ஜ.க. போராட்டத்தால் திரையிட்டு மறைப்பு!

வாழப்பாடியில் பத்திநாதர் தேவாலய வணிக வளாக கட்டத்தின் மீது 8 அடி உயர இயேசு சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக பாஜக போராட்டம் நடத்தியதால் திரையிட்டு மூடி மறைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-24 06:47 GMT

வாழப்பாடியில் பத்திநாதர் தேவாலய வணிக வளாக கட்டத்தின் மீது 8 அடி உயர இயேசு சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக பாஜக போராட்டம் நடத்தியதால் திரையிட்டு மூடி மறைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் கத்தோலிக்க கிறித்துவர்களின் சர்ச் அமைந்துள்ளது. இந்த சர்ச்சின் வளாகத்தில் மூன்று அடுக்கு வணிக கட்டடம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 8 அடி உயர இயேசு சிலையை சனிக்கிழமை நிறுவியுள்ளனர். இந்த சிலை அனுமதியின்றி வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி உடனடியாக அகற்ற வேண்டும் என்று சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவரும், வக்கீலுமான மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் பொன்.பழனிசாமி, குணசேகரன், வெங்கடாஜலம், ஜேகே, பழனிவேல், ஹரிஜெயசித்ரா உள்ளிட்டோர் சர்ச் வாசலில் போராட்டம் நடத்தினர்.

இது பற்றி தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் பாஜக நிர்வாகிகளுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை தொடர்நது வணிக கட்டத்தின் மீது இருந்த இயேசு சிலை மூடி மறைக்கப்பட்டது. இதன் பின்னர் பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamani

Tags:    

Similar News