'ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்' பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு - ஸ்டெர்லைடை திறக்க வலுக்கும் கோரிக்கை
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு கொடுத்து இருக்கிறார்கள்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிர்மல், ஜோயல் செல்வம் உள்ளிட்ட 16 பேர் மற்றும் கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருக்கிறார்கள். அப்பொழுது அவர்கள் தரப்பில் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 17 பேர் உட்பட தாங்கள் வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். நாலு வருட காலமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பலர் வேலை வாய்ப்பு இழந்திருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
குறிப்பாக ஆலையை திறந்தால் வேலைவாய்ப்பை தருவதாக ஆளை தரப்பில் தெரிவித்தனர். எனவே ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும். மேலும் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் கடலோர பகுதி வாழ் மக்களுடன் அளிக்க வந்த மோகன் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையில் சில வருடங்கள் வேலை பார்த்தேன். எந்தவிதமான பாதிப்பும் எனக்கு ஏற்படவில்லை. கழிவுநீர் கடலில் கலப்பதாக ஆலை எதிர்ப்பாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் அதற்கு இதுவரை தகுந்த ஆதாரங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் எங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கல்விக்கு உதவி செய்து வருகிறார்கள். வதந்திகளை நம்பாமல் ஆலையை திறக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் ராஜாவின் கோவில் பகுதியை சேர்ந்த ராணி என்பவர் தெரிவிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலைவாய்ப்பு இல்லை. 13 பேர் இறப்பிற்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கும் எந்த விதமான சம்மதமும் இல்லை என அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியது. காற்று மாசுபாட்டுக்கும் ஆளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை எனவே இளைஞர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.