மாணவிகள் ஒருவரை ஒருவராக தாக்கிக்கொண்ட சம்பவம் :ஆவடியில் அதிர்ச்சி !
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் மாணவிகள் ஒருவரை ஒருவர் குழுக்களாக தாக்கிக்கொண்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் மாணவிகள் ஒருவரை ஒருவர் குழுக்களாக தாக்கிக்கொண்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு வருவதை காண முடிகிறது. சமீபத்தில் ஆபத்தை உணராமல் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஏறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது போன்ற சம்பவங்களுக்கு காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தது.
அதே போன்று தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் சில மாணவர்கள் அரங்கேற்றி வரும் அத்துமீறல்களை பெற்றோர் மட்டுமின்றி பொதுவெளியில் செல்கின்ற பொதுமக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இதனை உறுதிப்படுத்தும் விதமாக மற்றொன்று சம்பவம் ஆவடி பேருந்து நிலைய பணிமனையில் காத்திருந்த மாணவிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சண்டையிட்டுக் கொள்ளும் மாணவிகள் பொதுமக்கள் சமாதானம் செய்தாலும் நிறுத்தவில்லை. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது பள்ளியில் எந்த மாதிரியான கல்வி கற்றுக்கொடுக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பள்ளிக்கு செல்கின்ற மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் பாடப்புத்தங்களை படித்தாலே போதும் என்ற நிலைக்கு அரசு கொண்டு செல்கிறது. இதனால் மாணவர்கள் ஒழுக்கத்தை சரியாக கடைப்பிடிக்காமல் ஏனோ தானோ என்ற எண்ணத்தில் பள்ளிக்கு வந்து செல்வதையும் காணமுடிகிறது. எனவே பொது வெளியில் மாணவ சமூதாயம் என்ன மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும், வீடுகளில் எந்த மாதரியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்ற நல்ல சிந்தனைகளை மாணவர்கள் கற்பித்தாலே இது போன்ற சண்டைகள் அரங்கேறாது என்பது அனைவரின் கருத்தாகும்.
Source, Image Courtesy: Puthiyathalamurai