ஆசிரியர்கள் மீது விழுகிற அடி: நடவடிக்கை எடுக்க தயங்கும் பள்ளிக் கல்வித்துறை?
வகுப்பு நேரங்களில் நேரடியாக வகுப்பறைக்கு வந்து மாணவரின் பெற்றோர் ஆசிரியரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு மாணவனை அடித்த ஆசிரியரை அவருடைய பெற்றோர் நேரடியாக வந்து பள்ளியில் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைதளங்களில் இது போன்ற வீடியோக்கள் வைரல் ஆகி வந்து இருக்கிறது. குறிப்பாக மாணவர்களை ஆசிரியர்கள் பிறம்பால் அடிப்பதற்கு தடை நீடிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழக மாணவர்கள் ஒழுங்கற்ற விதத்தில், கீழ்படியாமல் போன்றவை அதிகரித்து வருகிறது.
ஆசிரியரின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காமல் பல்வேறு செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இது பற்றி தமிழக பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டம் கீழநம்புறம் தொடக்கப்பள்ளியில் என்னும், எழுத்தும் நிகழ்ச்சிக்கு பிறகு மாணவர்களின் ஒருங்கிணைத்த ஆசிரியர் ஒருவர், இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை கன்னத்தில் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அந்த மாணவனின் பெற்றோர் குடும்பத்துடன் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்கள் முன்னிலையில் அந்த ஆசிரியரை தாக்கி இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறது. இது போல் மற்றொரு சம்பவம் தர்மபுரி மாவட்டம் மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் செய்முறை தேர்வுக்கு பிறகு அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளை சேதப்படுத்தியது. அது தொடர்பான வீடியோவும் வைரலானது. எனவே தமிழகத்தின் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் எழுந்து இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar