சென்னை: மாநகராட்சி பள்ளியை மருத்துவமனையாக மாற்ற முடிவா?

சென்னை தி.நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி குழந்தைகள் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவமனையாக மாற்ற முடிவு.

Update: 2022-11-25 03:12 GMT

சென்னை டிநகரில் உள்ள பாண்டி பஜார் மாநகராட்சி தொடக்கப்பள்ளி குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையாக மாற்றவும் அந்த பள்ளியில் உள்ள 81 குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிக்கு மாற்றம் செய்ய சட்டமன்ற உறுப்பினர் சென்னை மாநகராட்சிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். மேலும் சென்னையில் தி நகரில் மக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பகுதி. எனவே இந்த இடத்தில் அரசு மருத்துவமனைகள் இல்லை. இதனால் இந்த பகுதியில் அவசர காலங்களில் மக்கள் சிகிச்சை பெற முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.


இதன் காரணமாக பாண்டிபஜார் மாநகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ள இடத்தில் மருத்துவமனை அமைக்கும் திட்டத்தை தி நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மாநகராட்சியிடம் முன் வைத்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில் இந்த பள்ளியில் சுமார் 200 கிலோ மீட்டர் மற்றும் மாநகராட்சி பள்ளி இருப்பதன் காரணமாக இங்குள்ள மாணவர்களை அங்கு மாற்றலாம். 11 கிரவுண்ட் இடம் இங்கு இருப்பதாகவும் தீ நகரில் வேறு எங்கும் பெரிய இடம் இல்லை என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


அடுத்த கட்டமாக இந்த இடத்தில் எவ்வளவு சதுர அடிக்கு கட்டிடங்கள் கட்ட முடியும்? என்பதை ஆராய்ந்து பிறக்கும் இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகிறார். மருத்துவமனை கட்ட அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்த கல்வி ஆண்டு முடிவில் மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிக்கு மாற்றப்பட்டு விடுவார்கள். கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெறும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News