டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் அடுத்து வரும் 4 நாட்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் அடுத்து வரும் 4 நாட்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏரிகள் நிரம்பியது. இதனால் கரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கை ஒட்டி தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவுகின்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதிக கனமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
Source,Image Courtesy: News 7