தமிழக அமைச்சரவையில் மீண்டும் இலாகா மாற்றத்தில் ஏற்பட்ட குழப்பம்!

தமிழக அமைச்சரவையில் மீண்டும் இலாகா மாற்றம் நடைபெற்று உள்ளது.

Update: 2023-06-16 04:24 GMT

தமிழகத்தில் தற்பொழுது அமைச்சரவை மாற்றம் நிகழ இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக அமைச்சர் பதவியில் இருந்து வந்த செந்தில் பாலாஜி அண்மையில் வருமான வரி துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் அவர் வகித்து வந்த இரண்டு துறைகளும் வேறு இரண்டு அமைச்சர்களுக்கு மாற்றம் செய்வதாக முடிவாகி இருக்கிறது.


செந்தில்பாலாஜி வகித்து வந்த இலாகாக்களை தங்கம் தென்னரசுவுக்கும், முத்துசாமிக்கும் ஒதுக்க கவர்னர் ரவிக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு கூடுதலாக மின்சாரத்துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஒதுக்கீடு செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.


இருந்த பொழுதிலும் அரசு தரப்பு வட்டாரங்கள் இது பற்றி தெளிவான எந்த ஒரு தகவல்களையும் வெளியிடவில்லை. ஆனால் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பார் என தெரிகிறது. குறிப்பாக அவர் எந்த ஒரு இலக்காவிலும் பொறுப்பாளராக நியமிக்கப்படவில்லை என்றாலும் அவர் அமைச்சராக நீடிப்பார் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News