புயலை கண்டு மக்கள் அஞ்ச வேண்டாம் பா.ஜ.க உதவ தயார்: பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அதிரடி!

புயலைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டாம் பா.ஜ.க உதவ எப்பொழுதும் தயாராக இருப்பதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார்.

Update: 2022-12-11 12:49 GMT

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் "மாண்டஸ்" புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுளதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம், தனது அறிவிக்கையில், நேற்று தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது "மாண்டஸ்" புயலாக வலுவடைந்து தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது என்றும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டவிற்கு இடையே 9 இரவு நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக 08-12-2022 முதல் 11-12-2022 முடிய 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் எனறும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய பா.ஜ.க மற்றும் தொண்டர்கள் தயாராக உள்ளார்கள் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறினார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய பா.ஜ.க தொண்டர்கள் தயாராக உள்ளார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறார். 

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News